Search This Blog

Wednesday, October 14, 2009

ஆஸ்திரேலிய கல்வியின் சிறப்பம்சங்கள்

ஆஸ்திரேலிய கல்வியின் சிறப்பம்சங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களோடு கூடிய இணைந்து செயலாற்றும் உடன்பாடு, ஆய்வு நெறி முறைகள் ஆகியவற்றைக் கூறலாம். ஆஸ்திரேலியாவில் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதனால் ஆய்வுத் துறைகளில் ஆஸ்திரேலியாவே முதன்மையாக விளங்குகிறது.

புதுமையான கல்வி முறைகள், திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வி வசதிகள் வழங்கப்படுவதால், இங்கு பயிலும் மாணவர்கள் எதிர்கால சமுதாய தேவைக்கேற்ற முக்கிய அங்கமாக உருவாகிறார்கள். இங்கு சிறப்பான கல்வி தரப்படவேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அரசு அதிக மானியங்களையும் பிற உதவிகளையும் அதிக அளவில் தருகிறது. இதனால் ஆஸ்திரேலிய கல்வியானது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் கல்விச் செலவை விட குறைவாகவே இருக்கிறது.